‘மொபைல் வேண்டாம், இது மட்டும் போதும்’... ‘வாட்ஸ் அப்’பில் புதிய வசதி’!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Sangeetha | Jul 28, 2019 01:00 PM
செல்போனில் இண்டர்நெட் இணைக்கப்படாமலேயே, கணினியில் வாட்ஸ்-அப் வெப் பயன்படுத்தும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்படும் என வாட்ஸ்-அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷனில், முதன்மையாக வாட்ஸ் அப் திகழ்ந்துவருகிறது. நண்பர்களுடன் சாட்டிங், செய்திகளை அறிந்து கொள்வது என வாட்ஸ் அப் -ன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், பயனாளர்களுக்கு வசதியாகவும், பாதுகாப்பு அம்சங்களுக்காகவும், அவ்வப்போது அப்டேட்களை கொடுத்துவருகிறது. இதில் வாட்ஸ் அப்பின், டெஸ்க்டாப் வெர்ஷனும் புகழ்பெற்ற ஒன்று.
அலுவலக பயன்பாட்டுக்கு டெஸ்க்டாப் வெர்ஷன் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதில் வாட்ஸ் அப் செயலியின் கியூஆர் கோட் மூலம், கணினியில் இணைத்து வாட்ஸ் அப்பை, வாட்ஸ் அப் வெப் ஆக பயன்படுத்தலாம். எனினும் டெஸ்க்டாப் வெர்ஷனில், மொபைலை இண்டெர்நெட்டுடன் இணைத்திருந்தால் தான் பயன்படுத்தமுடியும். இந்நிலையில் தற்பொழுது மொபைலில் இண்டர்நெட் வசதி இணைக்கப்படாமலேயே, கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் வசதியை அந்த நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள வாட்ஸ்-அப் நிறுவனம், 'எங்களது நிர்வாகம் Universal Windows Platform செயலியை, New Multi Platform சிஸ்டத்துடன் இணைத்து பணியாற்றவுள்ளோம். இதன் மூலம் உங்கள் செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும், கணினியில் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தலாம்' என தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து இன்னும் வாட்ஸ் அப் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.