'வாட்ஸ் அப் சாட்டிங்கால் வந்த விபரீதம்'... 'தந்தை, மகன் எடுத்த பரிதாப முடிவு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 06, 2019 11:03 PM

மனைவியின் வாட்ஸ் ஆப் சாட்டிங்கால் கணவர் ஒருவர், தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

whatsapp chatting son and father suicide in coimbatore

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் அர்ஜூன். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கிற வயதில் மகன் இருக்கும் நிலையில், அலமேலு வீட்டில் இருக்கும் நேரத்தில் வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுடன் சாட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் புதன்கிழமை அலமேலு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டுக்குள் அர்ஜுனனும், அவரது 13 வயது மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டிலிருந்து அர்ஜுனன் கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் ஒன்றையும்  கைப்பற்றினர். அதில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சென்று வரும் மனைவி அலமேலுவுக்கு, வாட்ஸ் ஆப்பில் நிறைய நண்பர்கள் இருந்ததாகவும், அதில் ஒரு ஆண் நண்பருடன் அலமேலு நீண்ட நேரம் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்ததை கண்டு அர்ஜுனன் கண்டித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அலமேலு கணவனின் பேச்சை கேட்கவில்லை என்று கூறப்படுகின்றது. சம்பவத்தன்று இரவு மனைவி அலமேலு அந்த நபருடன் சாட்டிங்கில் ஈடுபட்ட வாட்ஸ் ஆப் பதிவுகளை வாசித்து பார்த்த அர்ஜூனன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்து அர்ஜுனன் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags : #WHATSAPP