‘இனிமேல் சாட்டிங் பண்ணிட்டே இத பண்ணலாம்’.. வரப்போகும் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Jun 24, 2019 05:44 PM

வாட்ஸ் அப் செயலில் புதிதாக அப்டேட் ஒன்று வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp is testing a new update for Android users

உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றத்துக்கு அதிகம் பேர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் செயலி விளங்கி வருகிறது. இதனால் பயனாளர்களை தக்கவைக்கும் விதமாக வாட்ஸ் அப் நிறுவனம் பல புதிய அப்டேட்களை அறிவித்து வருகின்றது. அதேசமயம் வாட்ஸ் அப்பின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் சில நடவடிக்கைகளை வாட்ஸ் அப்  நிறுவனம் எடுத்து வருகிறது.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் செயலியை ஹேக்கர்கள் முடக்க உள்ளதாக வந்த தகவலை அடுத்து, உடனடியாக வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்துகொள்ளுமாறு வாட்ஸ் அப் நிறுவனம் பயனாளர்களை அறிவுறித்தியது. இந்நிலையில் பயனாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ஏற்கனவே பிக்சர் இன் பிக்சர் முறையின் மூலம் வாட்ஸ் அப் வீடியோக்களை வாட்ஸ் அப்பிலேயே ப்ளே செய்து பார்க்கும் வசதி உள்ளது. ஆனால் அது வாட்ஸ் அப் சாட்டிங்கை விட்டு வெளியேறினால் வீடியோ ப்ளே ஆவது நின்றுவிடும். தற்போது இதனை மேம்படுத்தும் விதமாக வாட்ஸ் அப் சாட்டிங்கில் இருந்து வெளியேறினாலும் வீடியோ ப்ளே ஆகும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.