சீக்கிரம் வாட்ஸ் ஆப்ல இத பண்ணிருங்க, இல்லனா அவ்ளோதான்..! அலெர்ட் செய்த வாட்ஸ் ஆப் நிர்வாகம்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | May 14, 2019 10:44 AM

வாட்ஸ் ஆப் செயலியை ஹேக்கர்கள் ஹேக் செய்ய வாய்ப்பு உள்ளதாக வாட்ஸ் ஆப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

WhatsApp discovers surveillance attack

உலகளவில் வாட்ஸ் ஆப் என்னும் செயலியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் உடனுக்குடன் புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றின் மூலம் சுலபமாக தகவல் பரிமாற்றும் செய்யும் வசதி உள்ளது. இதனால் இச்செயலியின் பாதுகாப்பு கருதி அவ்வப்போது பல அப்டேட்டுகளை வாட்ஸ் ஆப் அறிவித்து வருகிறது.

இந்நிலையில் ஹேக்கர்கள் வாட்ஸ் ஆப்பை ஹேக் செய்ய முயன்றதாக அந்நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதில் ஹேக்கர்கள் தாங்கள் ஹேக் செய்ய நினைக்கும் பயனாளர்களுக்கு வாட்ஸ் ஆப் கால்(Whatsapp Call) மூலம்  அழைப்பு விடுக்கின்றனர். இதனை அடுத்து அந்த செல்போனை கண்கானிக்கும் செயலி தானாகவே செல்போனில் இன்ஸ்டால் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அந்த பயனாளரின் செல்போன் ஹேக்கர்களின் தொடர் கண்கானிப்பில் இருப்பதாக தெரிகிறது. இதனால் உடனடியாக பயனாளர்கள் தங்களது வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்து கொள்ளுமாறு வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவுறித்தியுள்ளது. புதிதாக உள்ள அப்டேட்டில் பாதுகாப்பு சில அம்சங்கள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : #WHATSAPP #HACKER