'அந்த பொண்ணுங்களை நம்பி' ...'எதையும் சொல்லாதீங்க'... 'அப்புறமா மாட்டிக்காதிங்க' !
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Jun 25, 2019 03:41 PM
இந்திய ராணுவத்தின் உளவுத்துறை அமைப்பு, ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சோம்வீர் சிங் என்ற இந்திய ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்கள், முக்கியமான வரைபடங்கள், ராணுவத்தின் ரகசிய செயல்பாடுகளை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ'க்கு ழங்கியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மெர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த அவரிடம்,சமூக வலைதளத்தில் போலியான கணக்குத் தொடங்கி, பெண் ஒருவர் பேசி ஏமாற்றி (honey-trapped) ராணுவம் தொடர்பான முக்கிய தகவல்களை வாங்கியது தெரியவந்தது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் உளவு அமைப்பு ராணுவ வீரர்கள், மற்றும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் ‘இன்ஸ்டாகிராமில் ஓயிசோம்யா (Oyesomya) மற்றும் ஃபேஸ்புக்கில் குஜ்ஜார் சோம்யா (Gujjar Soumya) என்ற கணக்குகள் போலியானவை. அதன் மூலம், எளிதில் ஏமாறக்கூடிய ராணுவத்தினரிடமிருந்து, ரகசிய தகவல்களை உளவாளிகள் வாங்க கூடும். நமது நாட்டின் பகை நாடுகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு ரகசிய தகவல்களை பெறலாம். எனேவ ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என,அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
