'ஒரேயொரு ஃபேஸ்புக் பதிவு'... 'காதலர்கள் எடுத்த விபரீத முடிவு'... 'இளைஞரின் அதிர்ச்சி செயல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 11, 2019 10:38 AM

பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால், கல்லூரி மாணவியும், அவரது காதலரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

lovers committed suicide due to wrong information in facebook

கடலூர் மாவட்டம் குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவியான ராதிகா. இவருக்கு, அதே பகுதியில் வசிக்கும் பிரேம்குமார் என்பவர், முகநூலில் ஆபாச வார்த்தைகளை பதிவு செய்து பதிவிட்டதாகவும், இதனைக் கண்டித்து அந்த மாணவி பதிலுக்கு ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், முகநூல் பதிவால் மனமுடைந்த மாணவி திங்கள்கிழமையன்று, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அத்தை மகனும், காதலனுமான வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார், அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முகநூலில் ஆபாசமாக பதிவிட்டு தப்பியோடிய பிரேம்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவியின் உறவினர்கள், பிரேம்குமாரை கைது செய்யக்கோரி விருத்தாசலம், கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்த முயன்றும் கலைந்து செல்லாத கிராமமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : #SUICIDE #NEIVELI #FACEBOOK