BGM Shortfilms 2019

'பாஸ்வேர்ட் தெரிஞ்சா என்ன'?... 'வேற யாரும் 'வாட்ஸ்அப் மெசேஜ்' பாக்க முடியாது... அதிரடி அப்டேட்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Jeno | Aug 14, 2019 10:54 AM

தகவல் தொடர்பிற்கு செல்போன் எவ்வளவு இன்றியமையாத ஒன்றாகி போனதோ, அது போன்று வாட்ஸ்அப் தற்போது மாறிவிட்டது. உலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் இந்த அப்ளிகேஷனை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதற்கு பின்பு அதில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்து வரும் அப்டேட்கள் பயனாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.

 

WhatsApp brings Finger Print authentication to Android beta users

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ் அப் நிறுவனம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் பயனாளர்களின் தகவல் பரிமாற்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்க ஃபிங்கர் பிரிண்ட்டின் மூலமாக வாட்ஸ் அப்பிற்குள் நுழையும் வசதி கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி  இந்தப் புதிய அம்சம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில்‌ சோதிக்கப்பட்டு, ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.19.221ல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் அப்பில் உள்ள, அக்கவுண்ட் ஆப்ஷனுக்கு சென்று அதிலுள்ள பிரைவேசி ஆப்ஷனை கிளிக் செய்தால் FINGER PRINT LOCK என்ற வசதி கொடுக்கப்பட்டுள்ளது அதனை ஆன் செய்தால் ‌‌கை ரேகை கேட்கும்‌. பயனாளர் தங்கள் கைரேகையை கொடுக்க அனுமதித்தால் வாட்ஸ் அப் லாக் ஆ‌‌கிவிடும். அதன்பிறகு வாட்ஸ் அப்பை திறக்க ‌பயனர்களின் கைரேகை அவசியம்.

இந்த புதிய வசதி பயனாளர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அதே போன்று நாம் ஒருவருக்கு ஃபார்வேர்டு செய்யும் செய்தி எத்தனையாவது முறையாக பரிமாறப்பட்டுள்ளது என்ற ஆப்ஷனும் அப்டேட் செய்யப்பட்டுள்‌ளது.

Tags : #WHATSAPPUPDATE #WHATSAPP #FACEBOOK #ANDROID BETA #FINGER PRINT