திரும்ப 'வந்துட்டேன்னு' சொல்லு.. ஜியோ அளித்த செம 'ஆபர்'.. வாடிக்கையாளர்கள் 'ஹேப்பி' அண்ணாச்சி!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Manjula | Nov 11, 2019 01:44 PM
இந்திய டெலிகாம் துறையில் கொடிகட்டி பறக்கும் ஜியோ நிறுவனம் தனது பிரீபெய்ட் திட்டம் ஒன்றில் ஒரு புதிய மாற்றத்தை செய்துள்ளது.

அதாவது ஜியோவின் 149 திட்டத்தை பொறுத்தவரையில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ-ஜியோ அன்லிமிடெட் இலவச அழைப்புகள் ஆகியவற்றை 28 நாட்களுக்கு அளித்து வந்தது. தற்போது அதே திட்டத்தில் ஒரு சிறிய மாற்றத்தை ஜியோ செய்துள்ளது.
அதன்படி ஜியோ தவிர்த்து பிற நெட்வொர்க்குகளுக்கு 300 நிமிடங்கள் இலவசமாக பேசிக்கொள்ளலாம். மற்றபடி தினசரி 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், ஜியோ டூ ஜியோ இலவச அழைப்புகள் எதிலும் மாற்றமில்லை. ஆனால் 28 நாட்கள் வேலிடிட்டிக்கு பதிலாக 24 நாட்களை வேலிடிட்டி காலமாக அறிவித்துள்ளது.
இந்த 149 ரூபாய் திட்டத்தின் மூலம் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமாவுக்கு இலவச அணுகல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : #JIO
