ஜியோ, ஏர்டெல், வோடபோன் சண்டையால்.. 40 ஆயிரம் ஊழியர்கள்.. வீட்டுக்கு அனுப்பப்படலாம்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Manjula | Oct 30, 2019 03:40 PM

ஜியோவின் போட்டியை சமாளிக்க தொடர்ந்து சலுகைகளை வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் வாரி வழங்கின. இதனால் அந்த நிறுவனங்கள் தங்கள் லாபத்தை விட்டுக்கொடுத்து, மறுபுறம் கடனாளிகளாகவும் மாறி வருகின்றனர்.

40,000 telecom jobs risk at after sc verdict, details here!

இதற்கு மத்தியில் ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ மற்றும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், மத்திய டெலிகாம் துறை கோரிய 92,642 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

இதன்படி ஏர்டெல் நிறுவனம் 21,682 கோடி ரூபாயும்,  வோடபோன் ஐடியா நிறுவனம் 28,308 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு ஏற்கனவே நீடித்த கட்டணப் போர்களையும், அதிக கடன் சுமையையும் எதிர்த்துப் போராடும் சுமைகளை இன்னும் அதிகமாக்கியுள்ளது.

ஏற்கனவே கடந்த 3 வருடங்களாக டெலிகாம் நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பதை கணிசமாக குறைத்து விட்டன. இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஐயூசி கட்டண பிரச்சினை, ஜியோவின் போட்டி போன்றவற்றால் அடுத்த 6 மாதங்களில் சுமார் 40 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்கலாம் என மனிதவள ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #JIO #JOBS