வரம்பற்ற குரல் அழைப்புகள்.. தினசரி 1 ஜிபி டேட்டா.. 500 எஸ்எம்எஸ்.. 28 நாள் வேலிடிட்டி.. இவ்வளவும் 108 ரூபா தான்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Manjula | Oct 25, 2019 05:03 PM
ஜியோ ஒரு காலுக்கு 6 பைசா என அறிவித்தாலும் அறிவித்தது. ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் அதை வச்சு செய்து வருகின்றன. அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 108 ரூபாய் பிரீபெய்ட் திட்டத்தை நீட்டிப்பு செய்துள்ளது.
டெல்லி, மும்பை தவிர மற்ற வட்டாரங்களில் இந்த திட்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த திட்டம் வரும் டிசம்பர் 12-ம் தேதி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், 28 நாட்களுக்கு 500 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
தற்பொழுது இந்த ரூ.108 பிரீபெய்ட் திட்டம் சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இத்துடன் பிஎஸ்என்எல் வழங்கிவரும் ரூ.1,188 மதுரம் ப்ரீபெய்ட் திட்டத்தின் காலத்தை ஜனவரி 2020 வரை பிஎஸ்என்எல் நீட்டித்துள்ளது.
மதுரம் ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 5ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மேலும், குரல் அழைப்புகள் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் கிடைக்கும். அதன் பிறகு, அழைப்புகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், 365 நாட்களுக்கு 1200 மெசேஜ்கள் இலவசமாக கிடைக்கும்.