ஒரே காசுல 'ரெண்டு' லட்டு.. 42 பதிலா 84 ஜிபி... 'DOUBLE DATA' சலுகையை 'அறிவித்த' நிறுவனம்.. ஜியோவுக்கு செம போட்டி!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Manjula | Oct 16, 2019 12:47 PM
இனி வாய்ஸ் கால்களுக்கு 6 பைசா கட்டணம் என ஜியோ அறிவித்ததில் இருந்து ஏர்டெல் நிறுவனமும், வோடபோன் நிறுவனமும் அதை வைத்து செய்து வருகின்றன. முதலில் வாய்ஸ் கால்களுக்கு எந்த கட்டணமும் கிடையாது என ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அறிவித்தன.இந்தநிலையில் தற்போது வோடபோன் நிறுவனம் டபுள் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.

199 ரூபாய் பிரீபெய்ட் ரீசார்ஜ்:
வோடபோனின் இந்த ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆனது முன்னதாக தினமும் 1.5 ஜிபி அளவிலான டேட்டா, எந்த வரம்பும் இல்லாத வரம்பற்ற குரல் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்கியது. இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்கள். தற்போது டேட்டா வரம்பை 1.5 ஜிபியில் இருந்து 3 ஜிபி என்னும் அளவில் உயர்த்தியுள்ளது. இதனால் மாதத்துக்கு 42 ஜிபி என்றளவில் இருந்த டேட்டா தற்போது 84 ஜிபி என்றளவில் கிடைக்கும்.
399 ரூபாய் பிரீபெய்ட் ரீசார்ஜ்:
வோடபோனின் இந்த ரூ.399 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆனது முன்னதாக தினமும் 1 ஜிபி அளவிலான டேட்டா, எந்த வரம்பும் இல்லாத வரம்பற்ற குரல் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்கியது. இதன் வேலிடிட்டி காலம் 84 நாட்கள். தற்போது டேட்டா வரம்பை 1 ஜிபியில் இருந்து 2 ஜிபி என்னும் அளவில் உயர்த்தியுள்ளது. இதனால் 3 மாதத்துக்கு 84 ஜிபி என்றளவில் இருந்த டேட்டா தற்போது 168 ஜிபி என்றளவில் கிடைக்கும்.
எப்படி கண்டறிவது?
கூடுதல் டேட்டா நன்மைகளை வழங்கும் இந்த திட்டங்களை பெற, வோடாபோன் ப்ரீபெய்ட் பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை வோடபோன் வலைத்தளம் அல்லது MyVodafone App மொபைல் பயன்பாட்டில் உள்ளிட வேண்டும், பின்னர் இந்த திட்டங்கள் ‘Recommended’ plans பிரிவின் கீழ் காணப்படுவதை பார்க்கலாம்.
எந்தெந்த மாநிலங்கள்:
இந்த ஆபர் எப்போது முடியும் என்பது போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. எனினும் தற்போது மும்பை, ஆந்திரா, சென்னை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய சர்க்கிள்களில் இந்த ஆபர் கிடைக்கும் என்பதை டெலிகாம்டால்க் என்னும் தளம் உறுதி செய்துள்ளது.
