‘மாசத்துக்கு 12 ரூபாய் தான்’.. ‘6 பைசா சர்ச்சை’ ஜியோ சொன்ன புது விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Selvakumar | Oct 17, 2019 07:33 PM
ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகளை வழங்காது என சமீபத்தில் அறிவித்தது.
ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைப்பு விடுத்தால் நிமிடத்துக்கு 6 பைசா வீதம் வசூலிக்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்தது. இது ஜியோ வாடிக்கையாளர்களிடயே விவாதத்தை ஏற்படுத்தியது. இது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் அனைத்து அழைப்புகளும் இலவசமாக வழங்ப்படும் என அறிவித்து அதிரடி காட்டினர்.
இந்நிலையில் 6 பைசா சர்ச்சைக்கு ஜியோ நிறுவனம் ட்விட்டர் வழியாக புது விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது. அதில், ‘ இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் (TRAI)-ன் தரவுபடி ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்கு பிற நெட்வொர்க்குகளுடன் 200 நிமிடங்கள் பேசுகிறார். அதற்கு ஆகும் IUC கட்டணம் (நிமிடத்துக்கு 6 பைசா வீதம்) சராசரியாக மாதம் ரூ.12 ரூபாய் என குறிப்பிட்டுள்ளது. இதன்வழியாக வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 12 ரூபாய் மட்டுமே செலவழிக்க உள்ளனர், இது பெரிய அளவிலான தொகை இல்லை என்கிற வகையில் ஜியோ நியாயப்படுத்தியுள்ளது
Important information - TRAI Report. Also, continue enjoying free & unlimited Jio to Jio calls.#DigitalLife #JioDigitalLife #IUC #JioOnIUC #DigitalIndia #TRAI #TRAIreport pic.twitter.com/ukJ1SCIQKk
— Reliance Jio (@reliancejio) October 14, 2019