‘155 ரூபாய்க்கு 28 GB'.. ‘185 ரூபாய்க்கு 56 GB'.. இன்னும் 2 புதிய ப்ளான்கள்..! அதிரடி காட்டிய ஜியோ..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Oct 25, 2019 11:21 PM

ஜியோ நிறுவனம் புதிய ரீசார்ஜ் ப்ளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Reliance Jio launched new recharge plans for Jiophone users

ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது சில அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜியோபோன் பயனாளர்களுக்கு ‘ஆல் இன் ஒன்’ என்ற புதிய ப்ளானை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில், ரூ.75 ரீசார்ஜ் செய்தால் மாதத்திற்கு 500 நிமிடங்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக மற்ற நெட்வொர்களுடன் பேசிக்கொள்ளலாம். அத்துடன் 3 GB டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. ரூ.125 ரீசார்ஜ்  செய்தால் மாதத்திற்கு 14 GB இலவச டேட்டா மற்றும் 500 நிமிட கட்டணம் இல்லா இலவச அழைப்பு. ரூ.155 ரீசார்ஜ் செய்தால் மாதத்திற்கு 28 GB இலவச டேட்டா (ஒரு நாளைக்கு 1 GB)  மற்றும் 500 நிமிட கட்டணம் இல்லா அழைப்பு. மேலும் ரூ.185 ரீசார்ஜ் செய்தால் மாதத்திற்கு 56 GB இலவச டேட்டா (ஒரு நாளைக்கு 2 GB) மற்றும் 500 நிமிட கட்டணம் இல்லா அழைப்பு. இந்த அனைத்து திட்டங்களிலும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இடையேயான அழைப்பிற்கு கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு இதேபோல் ‘ஆல் இன் ஒன்’ ஆஃபர்களை ஜியோ வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags : #JIO #RELIANCEJIO #JIOPHONE #ALLINONE #JIOUSERS