சத்தம் இல்லாம.. 'ரெண்டு' திட்டங்களை 'தூக்குன' ஜியோ.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Manjula | Oct 20, 2019 07:00 PM
வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் போட்டியில் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் ஆகியவற்றுக்கு இடையே கடும் சண்டை நிலவி வருகிறது.இந்தநிலையில் சத்தம் இல்லாமல் இரண்டு குறைந்த விலை ரீசார்ஜ்களை ஜியோ நிறுவனம் நீக்கியுள்ளது. முன்னதாக ரூ.19 மற்றும் ரூ 52 என இரண்டு குறைந்த விலை ரீசார்ஜ்களை ஜியோ வைத்து இருந்தது.
இதில் 19 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாள் வேலிடிட்டியுடன் 150 MB 4ஜி டேட்டா, 20 எஸ்எம்எஸ்கள், வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகியவற்றை வழங்கியது.ரூ.52-க்கு ரீசார்ஜ் செய்தால் 7 நாளுக்கு 1.05 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 70 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கியது. தற்போது இந்த இரு திட்டங்களையும் ஜியோ நீக்கிவிட்டது.
வாடிக்கையாளர்கள் ஐ.யூ.சி டாப்-அப்களுடன் சேர்ந்து சாசெட் பேக்குகள் எனப்படும் குறைந்த விலை ரீசார்ஜ்களை செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதால், ஜியோ நிறுவனம் இதை நீக்கியுள்ளதாக தெரிகிறது. தற்போது ஜியோ மினிமம் ரீசார்ஜ் ஆக 98 ரூபாயை நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தில் 2 ஜிபி 4 ஜி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்குகிறது.