‘ஒரு மாசத்துல மட்டும் இவ்ளோ பேரா..!’.. ஏர்டெல், வோடாஃபோனை பின்னுக்கு தள்ளிய ஜியோ..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Selvakumar | Oct 20, 2019 03:19 PM
நாட்டில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலை தொலைதொடர்பு நிறுவனங்களில் ஜியோ (Jio) மட்டுமே வளர்ச்சியை கண்டு வருகிறது.
![Reliance Jio adds 84.45 lakh subscribers in August, TRAI reports Reliance Jio adds 84.45 lakh subscribers in August, TRAI reports](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/technology/reliance-jio-adds-8445-lakh-subscribers-in-august-trai-reports.jpg)
கடந்த ஜூலை மாத இறுதியில் தொலைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 116 கோடியே 83 லட்சத்து 12 ஆயிரமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாத இறுதியில் அந்த எண்ணிக்கை 117 கோடியை தாண்டியுள்ளது. இதில் தொலைதொடர்பு நிறுவனங்களை பொருத்தவரை தனியார் நிறுவனங்களான ஏர்டெல் (Airtel), வோடாஃபோன் (Vodafone), ஐடியா (Idea) போன்ற நிறுவனங்கள் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. ஆனா ஜியோ நிறுவனம் அதிகபடியாக வாடிக்கையாளர்களை கவர்ந்து ஏறுமுகத்தை பார்த்து வருகிறது.
ஜியோ நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 2.49 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 84 லட்சத்து 45 ஆயிரத்து 165 வாடிக்கையாளர்களை ஜியோ தன்வசப்படுத்தியுள்ளது. இதில் ஏர்டெல் 5,61,135 வாடிக்கையாளர்களையும், வோடாஃப்போன் சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) 2,36,702 வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)