'ஒவ்வொரு' 5 நிமிஷத்துக்கும்.. 'கேஷ்பேக்' தாறோம்.. பிரபல நெட்வொர்க்கின் 'அதிரடி' ஆபர்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Manjula | Nov 01, 2019 08:34 PM
ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் வாய்ஸ் கால்களுக்கு 6 பைசா கட்டணம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்கள் அதிரடி ஆபர்களை அள்ளி வழங்கி வருகின்றன. அந்தவகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது.

வயர்லைன், பிராட்பேண்ட் மற்றும் எஃப்டிடிஎச் வாடிக்கையாளர்களுக்கு இந்த 6 பைசா கேஷ்பேக் வாய்ப்பை அறிவித்துள்ளது. அதாவது நீங்கள் பேசும் ஐந்து நிமிட குரல் அழைப்புகளுக்கு ஆறு பைசா என்கிற கட்டணம் ஆனது உங்களுக்கு கேஷ்பேக்காக கிடைக்கும். ஒவ்வொரு ஐந்து நிமிட குரல் அழைப்புகளுக்கும் ஆறு பைசாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் அதன் ஆன்லைன் போர்ட்டலையும் திறந்துள்ளது. இந்த போர்டல் வழியாக வாடிக்கையாளர்கள் பாரத் ஃபைபர் இணைப்பை முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் லேண்ட்லைன், பிராட்பேண்ட் அல்லது பாரத் ஃபைபர் இணைப்பிற்கான ஆன்லைன் கோரிக்கையை வைக்க வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் (18003451500) அணுகலாம்.
