‘ஒரு நாளைக்கு 1 GB மட்டும் இல்ல’.. ‘அதுக்கும்மேல ஆனா அதே விலையில’ பிரபல நெட்வொர்க் -ன் அதிரடி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Selvakumar | Oct 13, 2019 06:18 PM
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிஎஸ்என்எல் பல அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது.

பெரிய அளவிலான நிதி நெருக்கடிக்கு ஆளான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் பல அதிரடியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1699 -க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு பயன்படுத்தும் வகையில் இருந்த சலுகையை 455 நாட்களாக அதிகரித்தது. மேலும் நாளொன்றுக்கு 3.5 GB டேட்டா என பல அதிரடி சலுகைகளை வழங்கியது.
இந்நிலையில் பிஎஸ்என்எல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தில் புதிதாக சலுகை ஒன்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 1 GB வீதம் மொத்தம் 71 நாட்கள் பயன்படுத்தும் வகையில் இருந்தது. இதில் இனிமேல் 1.5 GB டேட்டா கூடுதலாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு 2.5 GB டேட்டா பயன்படுத்த முடியும். மேலும் இந்த சலுகை அக்டோபர் 2019 வரை மட்டுமே கிடைக்கும் என பிஎஸ்என்எல் என தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஜியோ அவுட் கோயிங் கால்ஸ்களுக்கு நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதிலிருந்து ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை அறிவித்து வருகிறது. இதில் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் அவுட்கோயிங் கால்களுக்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
