‘கட்டண உயர்வின்றி தொடர’.. ‘பிரபல’ நெட்வொர்க்கின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ‘அசத்தல் ஐடியா’..

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Saranya | Nov 26, 2019 09:17 PM

கட்டணம் உயர்ந்தாலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்துகொண்டால் பழைய கட்டணத்திற்கே சேவையைப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது.

Airtel Price Hike Customers Can Queue Up Prepaid Recharges

ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் டிசம்பர் 1 முதல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ரீசார்ஜ் செய்பவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பழைய கட்டணப்படியே சேவையைத் தொடர ஒரு வழியும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுடைய நடப்பு ரீசார்ஜ் பிளான் தேதி முடியவில்லை என்றாலும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்துகொண்டால், பழைய பிளான் முடிந்த பிறகும், ஏற்கெனவே ரீசார்ஜ் செய்த கட்டணப்படியே சேவையைப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்த வசதி அனைத்து ரீசார்ஜ்களுக்கும் பொருந்தாது எனவும், அன்லிமிடட் காம்போ பிளான்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #JIO #AIRTEL #VODAFONE #BSNL #PRICE #HIKE