‘7 மாசம், தினமும் 2GB டேட்டா’.. பிரபல நெட்வொர்க்கின் அதிரடி ஆஃபர்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Nov 18, 2019 10:39 PM

பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

BSNL launches new prepaid plan, Heres what it offers

சில தினங்களுக்கு முன்பு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனை அடுத்து பயனளர்களை கவரும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.998-க்கு தினமும் 2GB டேட்டாவை 210 நாட்களுக்கு வழங்குகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை.

முன்னதாக ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூ.997-க்கு தினமும் 3GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம் என 180 நாட்களுக்கு என அறிவித்தது. மேலும் ரூ.399 சலுகையில் தினமும் 1GB டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 80 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Tags : #BSNL #PREPAID #OFFERS #RECHARGE