சென்னை மெட்ரோ ஸ்டேஷனில் துப்பாக்கி வைத்திருந்த நபர்.. ரொம்ப அட்வான்ஸ் மாடல்.. என்ன திட்டத்தோடு வந்தாரு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளை சோதனை செய்தே, உடமைகளை ஸ்கேன் செய்து தான் பயணிக்க அனுமதிப்பர்.இந்நிலையில், கேரளாவை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எழும்பூர் செல்ல கையில் பையுடன் வந்துள்ளார்.
கை துப்பாக்கி மற்றும் 10 ஏடிஎம் கார்டுகள்:
எப்போதும் போல அந்த நபரின் பையை மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஸ்கேன் செய்தனர். அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் பயணிகளை முழுமையாக பரிசோதனை செய்த பின்பே அனுப்புகின்றனர். அப்போது கை துப்பாக்கி ஒன்று மற்றும் 10 ஏடிஎம் கார்டுகள் இருந்ததை கவனித்தனர். மேலும் அந்த வயதான நபரை போலீசார் பையை கொண்டு வந்த நபரை தனியாக அழைத்து நிற்கும்படி கூறி உள்ளனர்.
குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதியா?
இதனால் உஷாரான அந்த நபர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து அந்த பெரியவரை பிடித்துள்ளனர். மேலும், அவரை கைது செய்த போலீசார், குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதியா என பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணையில் அந்த நபர் கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கொளத்தூர் அத்தோலி தெக்கேல் பகுதியை சேர்ந்த விஜயன்(60) என்றும், இவர் சென்னைக்கு வேலை தேடி கோவையில் இருந்து நேற்று மாலை கோவை விரைவு ரயில் மூலம் சென்னை வந்ததாகவும், அதன் பிறகு எழும்பூர் செல்ல, மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்ததாக கூறினார்.
அதிநவீன துப்பாக்கி:
அதோடு அவரிடமிருந்து கண்டறியபட்ட துப்பாக்கி அதிநவீன துப்பாக்கி என கூறுகின்றனர் காவல்துறை அதிகாரிகள். அதோடு, வேலை தேடி வந்த நபருக்கு துப்பாக்கி எதற்கு, 10க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் எதற்கு என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், அவர் வைத்திருந்த துப்பாக்கிற்கு உரிமம் இல்லையென்றும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
