சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் சற்று குறைந்து, மாலையில் மீண்டும் நகைபிரியர்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்துள்ளது.

இந்தியர்கள் நகை வாங்கி முதலீடு செய்வது வழக்கம். அவசரத் தேவைகளுக்கு நகைகளை பணையம் வைத்து பணம் பெறுவர். அதுமட்டுமல்லாமல் கலாச்சார ரீதியாக பெண் பிள்ளைகளின் திருமணத்திற்காக தங்கள் உழைப்பை நகைகளாக வாங்கி மகள்களுக்கு அளிப்பார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு தங்க விலை ஏற்ற இறக்கத்தை கவனித்தவாறு இருப்பார்கள். திருமண சீசன்களில் நகைக் கடைகளில் கூட்டம் அள்ளும். விலை குறைந்த நாட்களில் வாங்கி வைத்து விடலாம் என முன்கூட்டியே வாங்கி வைப்போரும் உண்டு.
சவரனுக்கு ரூ.128 குறைந்தது:
தங்கம் விலை 18ம் தேதி ஒரு சவரன் ரூ.36,320க்கும், 19ம் தேதி சவரன் ரூ.36,376, 20ம் தேதி சவரன் ரூ.36,704 என்று விலை உயர்ந்தது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் சவரன் ரூ.408 அதிகரித்தது. 21-ஆம் தேதி சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ.36,576க்கும் விற்கப்பட்டது.
திடீரென மீண்டும் உயர்ந்த தங்கம் விலை:
மறுநாள்(22ம் தேதி) தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,588க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,704க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை.
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.4,583க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.36,664க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. அதாவது, கடந்த சனிக்கிழமை விலையைவிட கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,605க்கும், சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,840க்கும் விற்கப்பட்டது.

மற்ற செய்திகள்
