ஒரே சந்தேகமா இருக்கே.. முடியை ஓபன் பண்ணிப் பார்த்த அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் ‘ஷாக்’ கொடுத்த பெண்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை விமான நிலையத்தில் 3 பெண்கள் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் பயணிகள் சிறப்பு விமானம் நேற்றிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளிடம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனை மேற்கொண்டர். சந்தேகத்துகிடமான பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது சென்னையை சோ்ந்த 3 பெண்கள், ஒரு குழுவாக அந்த விமானத்தில் வந்துள்ளனர். அவா்கள் தங்களிடம் சுங்கத்தீர்வை செலுத்துவதற்கான பொருட்கள் எதுவும் இல்லை என கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றுள்ளனர். இதனால் சுங்க அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்களை நிறுத்தி மீண்டும் உள்ளே அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மூவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் பெண் சுங்க அதிகாரிகள் 3 பெண் பயணிகளையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது அந்தப் பெண்கள் தலையில் அணிந்திருந்த ‘விக்’ எனப்படும் அலங்கார கூந்தலுக்குள் தங்க வளையல்கள், சிறு தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அப்பெண்களின் உள்ளாடையையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், தங்கப்பசைகள் அடங்கிய சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்களை மறைத்து வைத்திருந்ததையும் கண்டுப்பிடித்தனா். இந்த 3 பெண் பயணிகளிடமிருந்து மொத்தம் 525 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூபாய் 23 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நூதன முறையில் தலை கூந்தலுக்குள் தங்கத்தை வைத்து கடத்தி வந்த 3 பெண்களையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். அவா்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விக்கிற்குள் பெண்கள் தங்க நகைகள் கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
