ப்ளீஸ், நான் இறந்து போகணும்.. கேரள அரசிடம் விண்ணப்பித்த திருநங்கை.. நான் வேற என்னங்க பண்ணுவேன்?
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா: கேரள மாநிலத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் இறக்க அனுமதி கேட்டு அரசாங்கத்தை அணுகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேர்முகத் தேர்வுகளில் தொடர்ந்து நிராகரிப்பு:
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீரா கபீர். 35 வயதான திருநங்கையான அவர் அனைவரை போலவும் பணிக்கு சென்று சொந்த காலில் வாழ்க்கையை நடந்த விரும்பியுள்ளார். ஆனால், வேலைக்காக பலமுறை நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டு, நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார்.
மர்ம விலங்கின் காலடி தடம்.. அதிகாலையில் இறந்து கிடந்த ஆடுகள்.. அச்சத்தில் உறைந்த ஊர்மக்கள்
கருணைக் கொலைக்கு அனுமதி கோரி மனு:
அரசு பள்ளியில் பகுதி நேர வேலையில் பணியயமர்த்தப்பட்ட அனீரா கபீரை இரண்டு மாதங்கள் கழித்து பள்ளி நிர்வாகம் காரணம் ஏதுமின்றி அவரை வேலையில் இருந்து நீக்கியதாக அறிவித்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று அறியாத அனீரா வேறு வழியேதும் இல்லை என முடிவு செய்த கபீர், ஜனவரி மாதம் மாநில சட்ட உதவி சேவைகளை அணுகி, கருணைக் கொலைக்கு அனுமதி கோரி மனு அளிக்க ஒரு சட்டத்தரணியின் ஆலோசனை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த சம்பவம் கேரள அரசாங்கம் மட்டுமல்லாமல் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், அவரது நிலை குறித்து மேலதிக தகவல் தெரிந்து கொள்ள அரசு முன் வந்து அவருக்கு அரசு சார்பில் மீண்டும் ஒரு வேலை ஏற்பாடு செய்து அளிக்கப்பட்டது.
கசப்பான அனுபவங்கள்:
இதுக்குறித்து கூறிய அனீரா கபீர், 'பாலக்காடு பகுதியில் பிறந்த நான் ஒரு திருநங்கை என உணர்ந்த அன்றிலிருந்து போராடி வருகிறேன். என் குடும்பத்தாரிடம் கூட இதுக்குறித்து கூற முடியவில்லை. என்னைப் போன்ற சமூக மக்களுடன் வாழ வேண்டும் என விரும்பியே, வீட்டைவிட்டு வெளியேறி பெங்களூரு நகருக்கு சென்றேன். அங்கும் எனக்கு கசப்பான அனுபவங்களே மிஞ்சியது. ஒருக்கட்டத்தில் வெறுத்துப்போய் சொந்த ஊருக்கே திரும்பியுள்ளேன்.
எங்கும் அவமானங்கள்:
வேலைக்கான நேர்முகத் தேர்வில் பலமுறை அவமானங்களையே எதிர்கொண்டேன். இது போன்ற மற்றவர்களின் சீண்டுதல்களும், நிராகரிப்புகளும் எங்களை போன்றோரை மேலே வரவிடாது' எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
