போலீசை பார்த்ததும் தப்பி ஓடிய லாரி டிரைவர்.. ‘உள்ள என்ன இருக்குன்னு போய் பாருங்க’.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெட்ரோல் டேங்கரில் மறைத்து 2 டன் கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரேஷன் பரிவர்தன
ஆந்திர மாநிலம் விஜய நகர மாவட்டத்தில் அதிக அளவில் மலைப்பிரதேசங்கள் உள்ளன. இங்கு மறைமுகமாக கஞ்சா பயிரிடப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ஆந்திர மாநில அரசு, ‘ஆப்ரேஷன் பரிவர்தன’ என்ற பெயரில் தனி அதிரடி படை அமைத்து கஞ்சா கடத்தலை தடுத்து வருகிறது.
தப்பியோடிய லாரி டிரைவர்
இந்த நிலையில் நேற்று போலீசாருக்கு மலைப்பகுதியில் இருந்து ஹைதராபாத் நகருக்கு லாரி மூலமாக கஞ்சா கடத்த உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து விஜயநகரம்-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த சூழலில் இன்று அதிகாலை சோதனைச்சாவடி அருகே வந்த பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது போலீசாரின் கண்காணிப்பை கவனித்த லாரி டிரைவர், லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
மூட்டை மூட்டையாக இருந்த கஞ்சா
இதனை கவனித்த போலீசார் அந்த பெட்ரோல் டேங்கர் லாரியை சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அதிலிருந்த சுமார் 2000 கிலோ (2 டன்) எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.