மொத்தமாக '15 ஆயிரம்' ஊழியர்கள் ராஜினாமா... அதிர்ந்துபோன 'முன்னணி' வங்கி... என்ன நடக்கிறது?

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Manjula | Jan 08, 2020 11:48 PM

பொருளாதார மந்தநிலை காரணமாக நாட்டில் உள்ள ஊழியர்கள் பலரும் வேலையை விட்டு நீக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் மந்தநிலை நீடித்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 15 ஆயிரம் ஊழியர்கள் ஆக்சிஸ் வங்கியில் இருந்து வெளியேறி உள்ளனர்.

15000 employees resign as axis bank in few months

ஊழியர்கள் வெளியேறினாலும் இந்த நிதி ஆண்டில் இதுவரை சுமார் 28 ஆயிரம் ஊழியர்களை பணிக்கு எடுத்து உள்ளதாகவும், வருகிற காலாண்டில் மேலும் 4 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கவிருப்பதாகவும் ஆக்சிஸ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் தஹியா கூறுகையில், ''வங்கி வேகமாக விரிவடைந்து வருகிறது. இது அதிக எண்ணிக்கையிலான புதிய வாய்ப்புகளின் ஆண்டாகும். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மொத்த மற்றும் நிகர வளர்ச்சி அடிப்படையில் வளர்ச்சி அதிகம்,'' என தெரிவித்து இருக்கிறார்.

Tags : #JOBS