பெட்ரோல் போட பைக்கை திருப்பியபோது.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோரம்.. சாமி கும்பிடப் போன தம்பதிக்கு நடந்த சோகம்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவராத்திரிக்கு கோயிலுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 36). இவரது மனைவி மல்லிகா (வயது 24). இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீ சரண் (வயது 7) என்ற மகன் உள்ளான். தம்பதி இருவரும் வீட்டிலிருந்தே நெசவுத்தொழில் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அதற்காக காங்கேயம் ஊதியூர் கோவிலுக்கு கோபி தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது குள்ளம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வண்டியை திருப்பியுள்ளார்.
அப்போது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் கோபியின் வண்டியின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் கோபி, மனைவி மல்லிகா மற்றும் மகன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனைியல் சிகிச்சை பெற்று வந்த கோபி மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மகன் ஸ்ரீ சரண் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளான். கோயிலுக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகன விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
