விடுதி அறையில் காதலனுடன் இருந்த இளம்பெண்.. நள்ளிரவில் ஹோட்டலுக்கு வந்த போன் கால்.. பதறியடித்த ஊழியர்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருவனந்தபுரம் : இளம்பெண் ஒருவரின் மறைவு தொடர்பாக, இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![kerala phone at midnight for hotel workers shocked police enquiry kerala phone at midnight for hotel workers shocked police enquiry](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/kerala-phone-at-midnight-for-hotel-workers-shocked-police-enquiry.jpg)
காட்டாக்கடை பகுதியை அடுத்த வீரனகாவு பகுதியை சேர்ந்தவர் காயத்ரி தேவி (வயது 25). இவர் ஹோட்டல் அறை ஒன்றில் உயிரிழந்து போன நிலையில், இது தொடர்பாக பிரவீன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து, இளம்பெண்ணை கொலை செய்ததற்கான காரணம் குறித்து, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளடைவில் காதல்
கேரளா மாநிலம், கொல்லம் பகுதியை அடுத்த பரவூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே கடையில், காயத்ரியும் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் முதலில் நட்பாக பழகி வந்துள்ள நிலையில், நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
மனைவிக்கு தெரிய வந்த விஷயம்
ஆனால், பிரவீனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளது. தொடர்ந்து, கணவரின் நடத்தை பற்றி, அவரின் மனைவிக்கும் தெரிய வந்துள்ளது. உடனடியாக, கணவர் வேலை செய்யும் நகைக்கடைக்கு புகார் ஒன்றை அளித்ததாக கூறப்படுகிறது. காயத்ரியின் வீட்டிலும் இது பற்றி தகவலை தெரிவித்துள்ளார் பிரவீனின் மனைவி. இதனால், அந்த கடையில் இருந்து காயத்ரியை விலக்கியதாக கூறப்படுகிறது.
விடுதி ஒன்றில் அறை
இதன் பிறகு, காயத்ரி வேறு வேலை தேடி வந்துள்ளார். அதே போல, பிரவீனும் தமிழ்நாட்டில் உள்ள ஷோரூம் ஒன்றிற்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே, திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில், நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார் பிரவீன்.
நள்ளிரவில் வந்த போன் கால்
இதன் பின்னர், சுமார் 12 மணியளவில் காயத்ரியும் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில மணி நேரத்தில், அங்கிருந்து பிரவீன் கிளம்பி வெளியே சென்றுள்ளார். பிறகு, இரவு சுமார் 12 மணியளவில் தான் தங்கியிருந்த விடுதிக்கு போன் செய்த பிரவீன், அறையில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதிர்ந்து போன ஊழியர்கள்
இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள், பிரவீன் தங்கியிருந்த அறையை சென்று பார்த்த போது, வெளியே பூட்டி இருந்ததாகவும், இதனால் சந்தேகத்தின் பெயரில் போலீசாரை விடுதிக்கு அழைக்கவும் செய்துள்ளனர். அப்போது, போலீசார் அங்கு வந்து கதவைத் திறந்து பார்த்த போது, இளம்பெண் காயத்ரி இறந்து கிடந்துள்ளார்.
போலீசார் விசாரணை
அவரின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு வேண்டி, அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே, காயத்ரியுடன் தங்கியருந்த பிரவீனை பிடிக்க காவல்துறையின் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால், பரவூர் காவல் நிலையத்தில் பிரவீன் சரண் அடைந்தார்.
விடுதியில் வைத்து, காயத்ரியுடன் பேசிக் கொண்டிருந்த போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கோபம் தலைக்கேறி காயத்ரியை தீர்த்துக் கட்டியதாகவும் பிரவீன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரவீன் மற்றும் காயத்ரி ஆகியோர், தாலி கட்டித் திருமணம் செய்து கொண்டதாகவும், சில புகைப்படங்கள் வெளியாகி, இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகவும், போலீசார் பிரவீனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)