‘கால்ல வளையல்.. தனித்தனி சேர்’.. கோலகலமாக நடந்த வளர்ப்பு நாயின் வளைகாப்பு.. அசத்திய குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 17, 2022 12:45 PM

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி உறவினர்களுக்கு விருந்து வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Salem family celebrate baby shower function to their pet dog

சேலம் மாவட்டம் மேச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் அப்பகுதியில் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சுசீலா என்ற மனைவியும், ஹேமராணி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் ஹைடி என்ற ஆண் பொமேரியன் வகை நாயும், சாரா என்ற பெண் பொமேரியன் வகை நாயும் வளர்த்து வருகிறார்கள். இதில் சாரா நாய் கர்ப்பமாக உள்ளது.

இதனை அடுத்து கடந்த 13-ம் தேதி வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் இரண்டு நாற்காளிகளில் இரு நாய்களையும் அமர வைத்து மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு சாராவிற்கு வளையலை மாட்டியுள்ளனர்.

Salem family celebrate baby shower function to their pet dog

இதனைத் தொடர்ந்து விழாவிற்கு வந்தவர்களுக்கு இனிப்பு, காரம் என 5 வகையான அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. சாராவிற்கு நாய்க்கு வளையல் மாட்டிய சுமார் 30 பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, தட்டு, கண்ணாடி, சீப்பு, தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவை அடங்கிய தொகுப்புகளை கொடுத்து நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த போட்டோ சமுக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கொரோனா காலத்தில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே இந்த நாய்களை வாங்கி வந்து வளர்த்து வருவதாக உரிமையாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். தனது மகள் இந்த இரு நாய்களையும் அன்பு காட்டி வளர்த்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

Tags : #SALEM #BABY SHOWER #DOG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Salem family celebrate baby shower function to their pet dog | Tamil Nadu News.