செங்கல்சூளையில் லாரி டிரைவருடன் பழக்கம்.. கண்டுகொள்ளாத தாய்.. கண்டித்த தந்தை.. ஆத்திரத்தில் தாயுடன் சேர்ந்து மகள் போட்ட பகீர் திட்டம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமநாதபுரம் அருகே மகளின் தகாத உறவை கண்டித்த தந்தைக்கும் நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் ஆசாரிமடம் பகுதியைச் சேர்ந்தவா் ரவி (வயது 53). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பாக்கியம் (வயது 51). இந்த தம்பதிக்கு பவித்ரா (வயது 26) என்ற மகள் உள்ளார். இவருக்கு உச்சப்புளி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருடன் திருமணம நடந்துள்ளது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த சூழலில் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் பவித்து வசித்து வருகிறார். அப்போது தாய் பாக்கியத்துடன் செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்துள்ளார்.
தந்தை உயிரிழப்பு
இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த தந்தை ரவி உடலில் தீப்பற்றி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரவி உயிரிழந்தார். முதலில் கிடைத்த தகவலின் அடிப்படையில், குடும்ப பிரச்சினை காரணமாக மதுபோதையில் உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
தாய், மகளிடம் கிடுக்குப்பிடி விசாரணை
அப்போது விசாரணையில், மனைவி பாக்கியம் மற்றும் மகள் பவித்ரா ஆகிய இருவரும் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தினரிடமும் விசாரித்துள்ளனர். அப்போது, ஒரு பாட்டிலில் பவித்ரா பெட்ரோல் வாங்கி வந்ததாக, அந்த ஊரை சேர்ந்த சிறுவன் ஒருவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பவித்ராவிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில், திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
லாரி டிரைவருடன் பழக்கம்
அதில், செங்கல்சூளையில் செங்கல் லோடு ஏற்ற வந்த இடையர்வலசையை சேர்ந்த முருகானந்தம் (வயது 42) என்ற லாரி டிரைவருடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தாய் பாக்கியம் கண்டுகொள்ளாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் தந்தை ரவி கண்டித்துள்ளார்.
திடுக்கிடும் தகவல்
இதில் ஆத்திரமடைந்த மகளும், தாயும் கடந்த 8-ம் தேதி இரவு ரவி தூங்கிக்கொண்டிருந்தபோது பெட்ரோலை ஊற்றி உயிரோடு தீ வைத்துவிட்டு தப்பி சென்றதாக சொல்லப்படுகிறது. உடலில் தீப்பற்றி ரவி அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்துள்ளனர். அப்போது மகள் பவித்ராவும், தாய் பாக்கியமும் பதறியடித்து கொண்டு ஓடி வந்துள்ளனர். அப்போது பவித்ராவுடன் தகாத உறவில் இருந்ததாக சொல்லப்படும், லாரி டிரைவர் முருகானந்தம் ரவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இவை அனைத்தும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது
இதனை அடுத்து மனைவி பாக்கியம், மகள் பவித்ரா, லாரி டிரைவர் முருகானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பவித்ராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், போலீசார் கண்காணிப்பில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
