கழிவு நீரில் நிர்வாணமாக மிதந்த பெண் சடலம்.. ஆடு மேய்ப்பவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்.. ஆத்தூரில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கழிவு நீரில் நிர்வாணமாக பெண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள துலக்கனூரில் சுவேத நதி உள்ளது. இங்கு குப்பைகள் அதிகமாக கொட்டப்படுவதால் நதி, கழிவு நீராக மாறியுள்ளது. நேற்று அப்பகுதியில் சிலர் ஆடு மேய்த்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது கழிவு நீரில் நிர்வாணமாக பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நிர்வாணமாக மிதந்த பெண் சடலம்
தகவலறிந்து தீயணைப்பு வீரர்களுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனை அடுத்து கழிவு நீரில் மிதந்து கொண்டிருந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தீவிர விசாரணை
முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் 50 வயது மதிக்கதக்க பெண் என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நிர்வாணமாக கிடந்ததால், அப்பெண்ணை யாராவது பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்று ஆற்றில் வீசினார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பரபரப்பு
இப்பெண் எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி அங்கு வந்தார்? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவு நீரில் நிர்வாணமாக பெண்ணின் சடலம் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
