வீட்டுல கரெண்ட் கட்.. தூக்கக்கலக்கத்தில் பல் துலக்கிய இளம்பெண்.. கடைசியில் தெரியவந்த ஷாக் தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇளம்பெண் ஒருவர் கவனக்குறைவாக செய்த செயலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Young girl mistakenly brushing teeth with rat poison Young girl mistakenly brushing teeth with rat poison](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/young-girl-mistakenly-brushing-teeth-with-rat-poison.jpg)
ஆவி பறக்க கொதித்த நெய்.. வெறும் கையை விட்டு அப்பம் சுட்ட பாட்டி.. சிவராத்திரி விழாவில் ஆச்சரியம்..!
கர்நாடக மாநிலம் சுலியா மாவட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண் ஷர்வயா (22 வயது). கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காலை பல் துலக்குவதற்காக பிரஷை எடுத்து பேஸ்டை அப்ளை செய்துள்ளார். அப்போது அவரது வீட்டில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்துள்ளது. தூக்கக்கலக்கத்தில் பல் துலக்கும் போது பேஸ்ட்டின் சுவை வேறு மாதிரி இருந்துள்ளது.
உடனே பேஸ்ட் இருந்த இடத்தைச் சென்று பார்த்துள்ளார். அப்போதுதான் டூத் பேஸ்ட்-க்கு பதிலாக எலி மருந்தை வைத்து பல் துலக்கியது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வாயை சுத்தம் செய்துள்ளார். இந்த விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னால் கேலி செய்வார்கள் என மறைத்ததாக சொல்லப்படுகிறது.
அன்றைக்கு அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் எலி மருந்தில் பல் துலக்கியதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளார். இந்த சூழலில் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து எலி மருந்தில் பல் துலக்கிய விஷயத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அவரை மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷர்வயா பரிதாபமாக உயிரிழந்தார். எலி மருந்தில் பல் துலக்கியதை வீட்டில் சொன்னால் கிண்டல் செய்வார்கள் என கவனக்குறைவாக மறைத்ததால், இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)