'கதவை தட்டிய வீட்டு ஓனர்'... 'வீட்டிற்குள் அவர் கண்ட காட்சி'... 'அப்பாவுக்கு திதி வைத்த நாளில் மொத்த குடும்பத்திற்கும் நடந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டை சேர்ந்தவர் முத்து. இவருடைய மனைவி லதா. இந்த தம்பதிக்கு 26 வயதில் சேதுராமன் என்ற மகன் உள்ளார். இவர்கள் அனைவரும் கடலூர் கோண்டூர் சாய்பாபா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த முத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி இறந்து விட்டார்.
![Young man commits suicide with his mother on his father\'s death day Young man commits suicide with his mother on his father\'s death day](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/young-man-commits-suicide-with-his-mother-on-his-fathers-death-day.jpg)
தந்தை இறந்த துக்கத்திலிருந்த சேதுராமன், வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். அதோடு மதுப்பழக்கத்திற்கும் அடிமையானதாகக் கூறப்படுகிறது. கணவர் இறந்த துக்கத்திலிருந்த லதா, மகனும் சோகத்தில் குடிக்கு அடிமையானதால், அவரும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் முத்து இறந்து நேற்று முன்தினம் ஓராண்டு ஆனதால் லதா, கணவருக்குத் திதி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக நேற்று முன்தினம் தாயும், மகனும் அதற்கான பொருட்களை வாங்கி வீட்டில் வைத்திருந்தனர். இது பற்றி வீட்டு உரிமையாளர் மற்றும் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடமும் தெரிவித்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் காலையில் திதி கொடுக்க அழைத்து இருந்தார்களே, ஆனால் இன்னும் வீடு திறக்கப்படாமல் இருக்கிறதே என வீட்டின் உரிமையாளர் வீட்டின் மாடிக்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வீட்டிற்குள் லதாவும் அவரது மகன் சேதுராமனும் இறந்து கிடந்துள்ளார்கள். உடனே சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள்.
விசாரணையில் முத்து இறந்த நாளில் லதாவும், சேதுராமனும் குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தந்தை இறந்த நாளில் தாயுடன் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)