VIDEO: ‘கடை இருந்தே ஆகணும்’.. டாஸ்மாக் முன் தீக்குளிக்க முயன்ற ‘குடிமகன்’.. கடைசியில் ‘ட்விஸ்ட்’ வச்ச மக்கள்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட இருந்தது. இந்த தகவலை அறிந்த அப்பகுதிமக்கள் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் கடை உடனே மூடப்பட்டது. இதில் ஏமாற்றமடைந்த குடிமகன்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அப்போது டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்த நபர் ஒருவர் திடீரென தலையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, ‘கடை எங்களுக்கு வேணும், கடை இந்த இடத்துல தான் இருக்கணும். கடை இருந்தே ஆகணும்’ என தீக்குளிக்க முயன்றார். ஆனால் இதை பார்த்த பொதுமக்கள் அவரை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தனர். தன்னை யாராவது தடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தீக்குளிக்க முயன்ற குடிமகன், கடைசியில் பெட்ரோல் கண்ணில் பட்டு எரிச்சல் ஏற்படவே அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
என்னடா பெட்ரோல ஊத்தியும் ஒருபய கண்டுக்கல..? - டாஸ்மாக் கடை முன் நடந்த காமெடி...#WineShop | #TASMAC https://t.co/dkdQlzXIAm
— Thanthi TV (@ThanthiTV) May 27, 2020
News Credits: Thanthi TV

மற்ற செய்திகள்
