தைரியம் இருந்தா அந்த 'வெட்டுக்கிளி' கூட்டத்தை 'இப்போ' வரச்சொல்லுங்க... 'சேலம்' மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெட்டுக்கிளிகளை அழிக்கும் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறார்.

சேலம் மாவட்டம் பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் உதயகுமார் (19). திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.மாணவரான உதயகுமார் இந்தியாவுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வந்திருக்கும் வெட்டுக்கிளிகளை அழிக்க புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், '' தற்போது பல மாநிலங்களில் பயிர்களை தின்று அழிக்கும் வெட்டுக்கிளிகளை அழிக்க பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதால் நிலம் நாசமாகும் ஆபத்து உள்ளது. அதனால் குறைந்த செலவில் வெட்டுக்கிளிகளை அழிக்கும் பாதுகாப்பான கருவியை தயாரித்து உள்ளேன். வெட்டுக்கிளிகள் குறிப்பாக வெளிச்சத்தால் கவரும் தன்மை உடையது.
அதனால் சிறு குண்டு பல்பு, அதை சுற்றி வெட்டுக்கிளிகள் நுழையும் அளவு இடைவெளியுடன் இரு அடுக்கு கம்பி வலை அமைத்து அதில் மின் இணைப்பு கொடுத்துள்ளேன். இதை வயல்களின் நடுவே வைத்தால் இரவு முழுவதும் வெட்டுக்கிளிகளை கவர்ந்து இழுத்து மின்சாரத்தால் தாக்கி அழித்துவிடும். இக்கருவியால் ஒரு நொடிக்கு 100 வெட்டுக்கிளிகளை அழிக்கும் ஆற்றல் உள்ளது. தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் பாதிப்பு இல்லை. இனி வந்தாலும் அச்சப்பட வேண்டியதில்லை.
ஒரு ஏக்கர் வயலில் 4 முனைகளில் இதுபோன்ற கருவிகளை வைத்தால் 4 நாட்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் அழிக்கப்படும். கருவியின் அடிப்பரப்பில் பிளாஸ்டிக் பேப்பர் வைத்தால் இறந்த வெட்டுக்கிளிகளை எடுத்து உரமாக பயன்படுத்தலாம். இதனை தயாரிக்க ரூ. 11 ஆயிரம் செலவாகி உள்ளது. அரசு கேட்டுக்கொண்டால் இதே போன்று நிறைய கருவிகளை செய்துதர தயாராக உள்ளேன். அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும்,'' என தெரிவித்து இருக்கிறார்.
News Credit: Maalaimalar

மற்ற செய்திகள்
