'ஆண்குறி வழியாக சார்ஜர் ஒயரை உள்ளே சொருகிய வாலிபர்...' '25 வருஷ சர்வீஸ்ல இப்படி ஒரு சம்பவத்தை பார்த்ததே இல்ல...' இதுக்காக தான் ஒயரை உள்ள விட்ருக்கார்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jun 05, 2020 04:41 PM

அசாமில் தனது ஆண் உறுப்பு வழியாக மொபைல் சார்ஜரை உள்ளே விட்ட நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீர் பையிலிருந்து கேபிளை நீக்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A person inserted mobile charger through the urinary tract

அசாம் மாநிலத்தை சேர்ந்த 30 வயதான இளைஞர் தனது பாலியல் சுகத்திற்காக தனது ஆண்குறி வழியே கேபிள்கள் மற்றும் பிற பொருட்களை சொருகும் பழக்கத்தை உடையவர். அதேபோல் மொபைல் போனின் சார்ஜ் ஒயரை உபயோகிக்கும் போது அந்த கேபிள் அவரது சிறுநீர்ப்பையை அடைந்தது.

இதன் காரணமாக வயிற்று வலியில் அவதிப்பட்ட அந்த இளைஞர் வேறு வழி இல்லாமல் மருத்துவமனையை நாடியுள்ளார். மேலும் மருத்துவர்களிடம் தான் வாய் வழியாக சார்ஜ் கேபிளை முழுங்கியதாகவும் பொய் கூறியுள்ளார். உடனே மருத்துவர்கள் அவரது மலத்தை ஆராய்ந்து எண்டோஸ்கோபியையும் நடத்தியுள்ளனர், ஆனால் கேபிளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரை அறுவை சிகிச்சை செய்தபோது, அவரது இரைப்பைக் குழாயிலும் எதுவும் இல்லை.

இதனால் குழப்பமடைந்த மருத்துவர்கள் அப்போதே அவருக்கு ஒரு எக்ஸ்ரே எடுத்துள்ளனர் அதன் மூலம் கேபிள் உண்மையில் நபரின் சிறுநீர்ப்பையில் இருப்பது தெரியவந்தது. அப்போதே அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் வெற்றிகரமாக கிட்டத்தட்ட இரண்டு அடி நீளமுள்ள கேபிளை அவரது சிறுநீர் பையிலிருந்து அகற்றினர். மேலும் தற்போது அந்த இளைஞர் நன்றாக குணமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கூறிய குவஹாத்தியில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வல்லியுல் இஸ்லாம், '25 ஆண்டுகளாக அறுவை சிகிச்சைகள் செய்து வருகிறேன், ஆனால் இதுபோன்ற ஒரு அறுவை சிகிச்சை நடப்பது இதுவே முதல் முறை. நோயாளி எங்களிடம் உண்மையை மறைத்ததால் முதல் அறுவை சிகிச்சையின் நடுவே மீண்டும் ஒரு எக்ஸ்ரே நடத்தினோம்.

அதுமட்டும் இல்லாமல் அவர் முதலில் எங்களிடம் ஹெட்ஃபோன்களை வாய் வழியாக உட்கொண்டதாக எங்களிடம் கூறினார். இது ஒரு வகை ஆபத்தான சுயஇன்பம் ஆகும். ஒரு பொருள் அல்லது திரவத்தை சிறுநீர்க்குழாயில் செருகுவதாகும். அவர் கேபிளை செருகிய ஐந்து நாட்களுக்குப் பிறகு அந்த நபர் எங்களிடம் வந்துள்ளார். அவர் அதை மீண்டும் தனது வாயினூடாக உட்கொண்டார் என்று சொன்னார்.

மேலும் எங்களிடம் உண்மையைச் சொல்லியிருந்தால், அவர் அதைச் செருகிய அதே வழியில் கேபிளை அகற்றியிருக்கலாம். ஆனால் அவர் பொய் சொன்னதால் தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது' எனக் கூறினார் அறுவை சிகிச்சை நிபுணர் இஸ்லாம்.

அதுமட்டுமில்லாமல் நோயாளிக்கு எந்தவிதமான மனநலக் கோளாறும் இல்லை என்றும், பாலியல் இன்பத்திற்காக மட்டுமே இந்த செயலில் அவர் ஈடுபட்டதாகவும் கூறினார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. A person inserted mobile charger through the urinary tract | India News.