எப்படியெல்லாம் யோசிக்குறாங்க...! 'லேப்டாப், சிகரட்லையும் ஒளிச்சு அத வச்சுருக்காங்க...' 'இதெல்லாத்தையும் விட ஒருபடி மேலா போய்...' - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த பல மாதங்களாகவே அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்தி வரும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் தங்கத்துடன் 2.5 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களும் கைப்பற்றபட்டுள்ளன.
துபாயில் இருந்து தமிழம் வரும் பயணிகள் பல வகைகளில் தங்கங்களை கடத்தி வருகின்றனர். அதன் உச்சக்கட்டமாக சில நாட்களுக்கு முன் சென்னையில் வயிற்றில் தங்கத்தை கடத்தி வந்தனர்.
இதன்காரணமாக சோதனையை தீவிரப்படுத்திய சுங்க அதிகாரிகள் சென்னை, திருச்சி விமான நிலையங்களில் இதுபோன்ற நபர்களை குறிவைத்து பிடித்து தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று (24-01-2021) துபாயில் இருந்து சென்னை வந்த ஐந்து பயணிகளிடம் நடத்திய சோதனையில் சிகரேட், லேப்டாப்பில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மலக்குடலில் 18 பொட்டலங்களில் தங்கத்தை மறைத்து வைத்ததையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப், சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.