"இது வருஷக் கணக்கா போராடின பெண்களுக்கு கிடைச்ச வரலாற்று வெற்றி!".. கட்டிப்பிடித்து அழுது.. சாலையில் திரண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்திய பெண்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கருக்கலைப்பை அதிகாரப்பூர்வ சட்டமாக்கிய முதல் லத்தீன் அமெரிக்க நாடு என்கிற பெருமையை, புதிய வரலாற்றை, சாதனையை அர்ஜெண்டினா படைத்துள்ளது.
முன்னதாக செனட் சபையில் இதற்கான வாக்களிப்பு நடைபெற்றது. பல ஆண்டு காலமாக அர்ஜென்டினா பெண்கள் கருக்கலைப்பினை சட்டபூர்வமாக அனுமதிக்க வேண்டும் அல்லது சட்ட ரீதியாக கருக்கலைப்புக்கு இருந்த தடையை நீக்க வேண்டும் என்று போராடிக்கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் 38 உறுப்பினர்கள் இந்த வாக்களிப்பின் போது ஆதரவாக வாக்களிக்க, 29 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இழுபறியில் இருந்த இந்த பிரச்சனை இந்த வாக்களிப்பின் போது முடிவுக்கு வந்தது.
கருக்கலைப்புக்கு எதிரான கட்டுப்பாடுகளால் பல ஆண்டுகளாக இந்த செயல் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், இதற்கு எதிராக பெண்கள் தொடர்ந்து சாலைகளில் திரண்டும், விதவிதமான நூதன போராட்டங்களை முன்னெடுத்தும் தீவிரமாக போராடி வந்தனர்.
தற்போது அதற்கு சட்டப்பூர்வமான அனுமதி கிடைத்துள்ளது. இதனை அடுத்து பெண்ணிய உரிமை அமைப்புகள் உட்பட ஏராளமான பொதுமக்களும், பெண்களும், பச்சை கொடிகளுடன் சாலைகளில் திரண்டு ஆரவாரம் செய்து தங்களுடைய வெற்றிக் களிப்பை ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்தும், அழுதும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும் பகிர்ந்துகொண்டனர்.