'அமெரிக்க மாப்பிளைன்னு ஒன்னுக்கு ரெண்டா செஞ்சோம்'... 'கல்யாணம் ஆன முதல் நாளே கேட்ட கேள்வி'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 19, 2021 02:04 PM

விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து, அமெரிக்காவில் வேலை கிடைத்து, சென்னை பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர் தற்போது வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

chennai airport man arrested dowry torture usa return woman complaint

சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜெயஸ்ரீ என்ற பெண் அண்ணாசாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

"மேட்ரிமோனி மூலம் எனது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது விழுப்புரம் முத்தையா நகரை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் வசந்தன் (33) என்பவர் வரன் பார்க்கப்பட்டது.

பின்னர், கடந்த 2016ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. கணவர் வசந்தன் அமெரிக்காவில் இன்ஜினியராக வேலை செய்து வந்ததால் அவர்கள் கேட்ட வரதட்சணை அனைத்தும் எனது பெற்றோர் கொடுத்தனர்.

பிறகு, நான் கணவருடன் அமெரிக்காவிற்கு சென்று விட்டேன். அப்போது மீண்டும் அதிகளவில் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் நாங்கள் திருமணம் நடந்த நாள் முதல் இருவரும் ஒற்றுமையாக இல்லை. இதனால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

            

பிறகு இருவரும் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தோம். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் எங்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து சென்னை வந்துவிட்டேன். எனது வாழ்க்கை தற்போது கேள்வி குறியாக உள்ளது.

எனவே, அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய எனது கணவர் வசந்தன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

திருமணமான முதல் நாளிலிருந்தே வரதட்சணை கொடுமை இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வசந்தன் மீது வரதட்சணை வழக்கை போலீசார் பதிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து, நேற்று விமானம் மூலம் சென்னைக்கு வந்த வசந்தனை விமான நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai airport man arrested dowry torture usa return woman complaint | Tamil Nadu News.