'உங்க சம்பள கணக்கில் பிஎஃப் இருக்கா'?... 'சாப்ட்வேர் துறையில் அதிகம் சம்பளம் வாங்குபவரா'?... அப்போ நிச்சயம் இது அதிர்ச்சி அளிக்கும்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Feb 02, 2021 05:34 PM

மாத சம்பளத்தில் ரூ.2000க்கு மேல் பிஎஃப் கணக்கில் பணம் செலுத்துப்படுபவர்களுக்கு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

interest on pf contribution above 2 5 lakhs to be taxable details

மத்திய அரசால் 1968ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF)

தொடங்கப்பட்ட 7 வது வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் பகுதியாகப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும்.

ஐந்து நிதியாண்டுகளை நிறைவு செய்து மற்றும் மருத்துவச் சிகிச்சை போன்றவற்றை நோக்கிய சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் மட்டுமே முதிர்வடைவற்கு முன் முன்கூட்டி மூட அனுமதிக்கப்படும்.

பிஎஃப் கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனால் முதிர்வடைந்த ஒரு வருட காலத்திற்குள் மேற்கொண்டு 5 வருடங்கள் அல்லது அதற்கு மேலும் நீட்டிக்கப்படலாம். பிஎஃப் சந்தாதாரர்கள் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சத் தொகையான ரூ. 500 ஐ செலுத்தத் தவறினால், அந்தக் கணக்கு நிறுத்தப்பட்டதாகக் கருதப்படும்.

இந்தக் கணக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றப்படலாம். அத்தகைய வழக்கில் பிபிஎஃப் கணக்கு ஒரு தொடர்ச்சியான கணக்காகக் கருதப்படும்.

ஒரு சந்தாதாரர் அவருடைய கணக்கு அல்லது அவர் பாதுகாப்பாளராக இருக்கும் சிறுவரின் கணக்கையோ அந்தத் கணக்கு வைத்திருப்பவரின், அல்லது வாழ்க்கை துணைவரின் அல்லது குழந்தையின் தீவிர நோய்கள் அல்லது உயிருக்கு ஆபத்தான நோய்களின் சிகிச்சை செலவுகளுக்கு அந்தத் தொகைத் தேவைப்படும் என்கிற அடிப்படையில் தகுதியுடைய மருத்துவ அதிகாரியிடமிருந்து ஆதரவான ஆவணங்கள் வழங்கப்பட்டால் மட்டுமே கணக்கு முதிர்வடைவதற்கு முன் முன்கூட்டி மூட அனுமதிக்கப்படும்.

கணக்கு புதுப்பிக்கப்பட்டாலன்றிச் சந்தாதாரர் கடன் பெறவோ அல்லது ஒரு பகுதியாகப் பணத்தை திரும்ப பெறவோ முடியாது. சந்தாதாரர் நிறுத்தப்பட்ட கணக்குடன் கூடுதலாக மற்றொரு கணக்கைத் திறக்க முடியாது.

பிஎஃப் வட்டி விகிதத்திற்கு மேல் கடன் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2 சசதவிகிதமாக இருக்கலாம். கடன் 36 மாதங்களில் திருப்பிச் செலுத்தப்படும்

மற்ற சேமிப்புத் திட்டங்களை விட பிஎஃப் சேமிப்பில் உங்களுக்கு அதிக வட்டி வருவாய் கிடைக்கிறது. அவசரப் பணத் தேவைக்கும் எதிர்காலத் தேவைகளுக்கும் பிஎஃப் சேமிப்புப் பணம் மிகவும் உதவியாக இருக்கிறது.

வாங்கும் சம்பளத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் ஊக்கத்தொகையில் 12 சதவீதத்தை பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் சேமிக்க வேண்டும். ஈபிஎஃப் அமைப்புடன் பதிவு செய்துள்ள நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமே பிஎஃப் சேமிப்பில் முதலீடு செய்ய முடியும்.

இந்நிலையில், ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்துக்கு மேல், பிஎஃப் கணக்கில் பணம் செலுத்தப்பட்டால் அதற்கு வட்டி வதிக்கப்படும் என்று நிதிநி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளர்க்ய். அதன்படி, மாதம் ரூ.20000 மேல் பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும் சம்பளக்காரர்களுக்கு இது அறிவிப்பு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

குறிப்பாக ஐடி துறையில் அதிக சம்பளத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது தலைவலியை தரும்.

 

Tags : #PF #PPF #TAX

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Interest on pf contribution above 2 5 lakhs to be taxable details | India News.