'மிஸ் ஆயிடக் கூடாதுன்னு...' 'கல்யாண மண்டபம் ரூமுக்குள்ள வச்சி பூட்டிட்டு போனவரு...' 'வந்து பார்த்தப்போ...' - இடியாய் இறங்கிய அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை பல்லாவரத்தில் திருமண வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலை சேர்ந்த விஜயகுமார் (61) என்பவர் நேற்று காலை மாங்காடு அடுத்த பரணிபுத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது, அவரிடம் இருந்த நகை பைகளை, ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, திருமண வேலைகளை கவனித்தார்.
அதன்பின், அறைக்கு வந்த விஜயகுமார், அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், அறையில் வைத்திருந்த ஏழரை சவரன் நகைகள், 2 செல்போன்கள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதன்பின் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, ஒருவர் சாலையோரம் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த ஒருவரை அருகில் சென்று பார்த்தபோது, திருமண மண்டபத்தில் நகைகளை கொள்ளையடித்த வாலிபர் என தெரிந்தது. அதன்பின் அவரை பிடித்து விசாரித்ததில் அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
விசாரணையில் அந்த நபர் பொழிச்சலூரை சேர்ந்த பன்னீர்தாஸ் (எ) பன்னீர்செல்வம் (23). திருமண மண்டபத்தில், நகைகளை கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டார். அவரிடம் இருந்து நகை, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை, கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
