'டவுட் வராம இருக்க வெளிய பேரிச்சம்பழ பாக்கெட்...' 'ஆனா உள்ள இருந்தது பேரிச்சம்பழம் மட்டும் இல்ல...' - சினிமால கூட இந்த மாதிரி சீன் வரலையே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுமார் ரூ 15.26 லட்சம் மதிப்புடைய தங்கத்தை பேரீச்சம் பழங்களுக்குள் மறைத்து வைத்துக் கடத்தி வந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த சில மாதங்களாகவே அரபு நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. விதவிதமான முறைகளில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்ந்து அரங்கேற்றப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை வந்த பயணி ஒருவரின் உடைமைகளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த மர்மநபர் கொண்டுவந்த, பேரீச்சம்பழப் பாக்கெட்டை பார்த்தபோது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதை சோதனையிட்டபோது பசைப் பொட்டலங்களுக்குள் தங்கக் கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. அதில் 295 கிராம் எடையுடைய சுமார் ரூ.15.26 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சினிமாவை மிஞ்சிய இந்த கடத்தல் சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடந்தி வருகின்றன

மற்ற செய்திகள்
