“இவ்ளோ சென்சிடிவான நேரத்துல இப்படியா பண்ணுவீங்க.? உங்கள நெனைச்சு வெக்கப்படுறேன்!”.. கொதித்தெழுந்த சாக்‌ஷி தோனி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 28, 2020 02:45 AM

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசாங்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவியை பணமாகவோ பொருளாகவோ பாதுகாப்புக்காக கொடுத்து வருகின்றனர்.

stop carrying out false news at sensitive times, Sakshi Dhoni

அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்ததாகவும், கங்குலி ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான அரிசியை விநியோகம் செய்ததாகவும், இர்பான் பதான், யூசப் பதான் உள்ளிட்டோர் முகக் கவசங்கள் தயாரித்து கொடுத்ததாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.  இந்நிலையில் மகேந்திர சிங் தோனி 1 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்ததாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியானது.‌

பல்வேறு ஊடகங்களும் இந்த செய்தியை ஒளிபரப்பின.  ஆனால் இதுபற்றி தனது ட்விட்டரில் தோனியின் மனைவி சாக்ஷி தோனி, இதுபோன்ற சென்சிடிவான நேரங்களில் தவறான செய்திகளை வெளியிடுவதை நிறுத்துமாறு அனைத்து ஊடகங்களையும் கேட்டுக் கொள்வதாக காட்டமாக தெரிவித்துள்ளார்.  மேலும்

அப்பதிவில், ஊடகங்களைப் பார்த்து,  “உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். ஊடக பொறுப்பு என்பது எங்கே செல்கிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!” என்றும் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

 

Tags : #CORONA #CORONAVIRUS #MSDHONI #SAKSHIDHONI