'அம்மா வந்துரு மா'...'குழந்தைகள் கதறியும் மனம் இறங்கவில்லை'... 'வயச மறைச்சு கல்யாணம் பண்ணிட்டாரு'... பரிதவிப்பில் கணவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 31, 2020 05:54 PM

கணவரை விவாகரத்து செய்யாமல் இளம்பெண்ணும், மனைவியை விவாகரத்து செய்யாமல் இளைஞரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது குழந்தைகள் பரிதவித்து நிர்க்கதியாக நிற்கிறது.

Woman marrying man without divorcing first Husband in Trichy

திருச்சி மாவட்டம் எடமலைபட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். 44 வயதான குமரவேல் இன்டீரியர் டெக்கரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆஷா மெர்சி. இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பீம் நகரைச் சேர்ந்த செல்வகணபதி என்ற காவல் உதவி ஆய்வாளர் விபத்து ஏற்பட்டதில் ஆஷா மெர்சி வேலை பார்த்து வந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது தனது தந்தையைப் பார்ப்பதற்காக அவரது மகன் அபிஷேக் குமார் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளார்.

அப்போது,   அபிஷேக் குமாருக்கும் ஆஷா மெர்சிக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேசி பழகிய நிலையில் நாளடைவில் இந்த நட்பு திருமணத்தை மீறிய உறவாக மாறியது. அபிஷேக் குமார் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரித்து வாழ்ந்து வருகிறார். ஆனால் அவரிடம் இருந்து விவாகரத்து பெறவில்லை. இந்நிலையில் அபிஷேக் குமாரும், ஆஷா மெர்சியும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இருவரின் உறவு குறித்து குமரவேலுக்கு எதுவும் தெரியாது.

இந்நிலையில் கடந்த 2 -ஆம் தேதி மருத்துவமனைக்கு பணிக்குச் சென்ற ஆஷா மெர்ஷி வீட்டிற்குத் திரும்பவில்லை. இதனால் பதறிப்போன கணவர் எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலில்அபிஷேக் குமாரை ஆஷா மெர்சி திருமணம் செய்து கொண்டது உறுதியானது. முதல் கணவர் குமரவேல் உயிருடன் இருக்க சட்டப்படி விவாகரத்து பெறாமல் அபிஷேக்கை மெர்சி திருமணம் செய்துள்ளார்.அதேபோல அபிஷேக் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது விவாகரத்து பெறாத நிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனிடையே ஆஷா மெர்சி அபிஷேக்குடன் வசித்து வரும் நிலையில், தாயை காணாமல் அவரது குழந்தைகள் கதறித் துடிக்கின்றனர். அம்மாவைப் பார்க்க வேண்டும் என குழந்தைகள் ஒரு பக்கம் கதறி வரும் நிலையில், மனைவியை எப்படியாவது கூட்டிக் கொண்டு வர வேண்டும் என குமரவேல் தவித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், உங்களது மனைவிக்கு உங்களுடன் வர விருப்பம் இல்லை எனக் கூறுகிறார்கள், அபிஷக் உடன் தான் வாழ்வேன் எனக் கூறியுள்ளதாக போலீசார் கூறுகிறார்கள், குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டாவது ஆஷா திரும்பி வர வேண்டும் என குமரவேல் கண்ணீருடன் கூறியுள்ளார்.

ஆனால் ஆனால் ஆஷா மெர்சியோ மனம் இறங்குவதாகத் தெரியவில்லை. ஆஷா மெர்சி கூறுகையில் " எனக்கும் குமரவேலுக்கும் அதிக வயது வித்தியாசம் உள்ளது. வயதை மறைத்து அவர் என்னைத் திருமணம் செய்துகொண்டார்.இனி குமரவேலுடன் வாழத் தயாராக இல்லை. அபிஷேக்குடன் தான் வாழ்வேன். குழந்தைகளை என்னிடம் அவர் ஒப்படைக்க வேண்டும். அல்லது நீதிமன்றத்தை நாடி உரியத் தீர்வு பெறுவேன் என்று கூறுகிறார்.

ஆனால் இந்த போராட்டத்தில் பரிதவிப்பில் மாட்டியிருப்பது அந்த பிஞ்சு குழந்தைகளும், அவர்களின் எதிர்காலமும் தான். இதற்குத் தான் என்ன பதில் கூறப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

Tags : #HUSBAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman marrying man without divorcing first Husband in Trichy | Tamil Nadu News.