'முதலிரவில் மனைவியிடம்...' 'கேட்க கூடாத கேள்வியை கேட்டு டார்ச்சர் செய்த கணவன்...' - வெறுப்பின் உச்சத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதலிரவில் தன் கணவர் கேட்க கூடாத கேள்விகளை கேட்டு சந்தேகமடைந்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர் மாவட்டம் ஊசூர் அருகேயுள்ள கோவிந்தரெட்டி பாளையத்தை சேர்ந்த சந்திரலேகா என்பவருக்கும், காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 23-தேதி திருமணம் நடந்துள்ளது.
அன்றிரவு பாலாஜிக்கும், சந்திரலேகாவிற்கு முதலிரவு ஏற்பாடு நடந்துள்ளது. முதலிரவின் போதும் கணவர் பாலாஜி, தன் மனைவியிடம் நீ கற்புடன்தான் இருக்கிறாயா? இவ்வளவு அழகாக இருக்கும் நீ இதற்கு முன்னர் யாரையும் காதலிக்கவில்லையா? யாருடனும் உறவு வைத்துக் கொண்டதில்லையா எனக்கேட்டு சந்திரலேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.
இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு பிறகு, திருமணத்தில் பங்குகொள்ள முடியாத சந்திரலேகாவின் ஆண் நண்பர் ஒருவர், சந்திரலேகாவின் வீட்டிற்கே சென்று, அவருக்கும் அவரின் கணவர் பாலாஜிக்கும் திருமண வாழ்த்துகளை கூறியுள்ளார். அப்போது சந்திரலேகாவின் குண நலன்களையும் பாராட்டி புகழ்ந்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத பாலாஜி, ஆண் நண்பர் சென்ற பின் சந்திரலேகாவுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். வீட்டிற்கு வந்த ஆண் நண்பரையும் சந்திரலேகாவையும் சேர்த்து தவறாக பேசி வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
இதனால் மனமுடைந்த சந்திரலேகா கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் தாய் வீட்டிற்கு வந்து, தன் மனதில் உள்ள கஷ்டங்களையெல்லாம் கடிதமாக எழுதி வைத்து மண்ணெண்ணய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் தன் தங்கைகளுக்கு திருமணம் செய்யும் போது நல்ல மாப்பிள்ளையாக பார்த்து வைக்குமாறும் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
திருமணமான 8 நாட்களில் சந்திரலேகா எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதி மக்களையும், சந்திரலேகாவின் குடும்பத்தாரையும் கடும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
