'பிரபல டிவி ஷோவிலிருந்து'... 'மனைவிக்கு போன் செய்தபோது கேட்ட ஆண் குரல்'... 'எத்தன ட்விஸ்ட்டு'... 'வைரல் சம்பவம்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஹூ வாண்ட்ஸ் டு பி ஏ மில்லியனரில் போட்டியாளர் ஹோகனிடம் ஜெர்மனி குறித்த கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவருக்கு பதில் தெரியாததால் என் மனைவி அங்கே சிலமுறை சென்றிருக்கிறார், அவருக்கு இதற்கு கண்டிப்பாக பதில் தெரியுமெனக்கூறி, தொலைபேசியில் நண்பரை அழைக்கும் லைஃப்லைனில் தன்னுடைய மனைவி எலிசபெத்தை அழைக்குமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து அவருடைய மனைவிக்கு போன் செய்தபோது, அழைப்பில் மற்றொரு ஆண் குரல் கேட்க நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜெர்மி, "வேறு ஒரு ஆண் உங்கள் அழைப்பை எடுத்துள்ளார். ரிலாக்ஸ் ஆக இருங்கள். இது தவறான எதுவுமாக இல்லாமலும் இருக்கலாம்" எனக் கூறியுள்ளார். அதன்பிறகு மீண்டும் அழைக்கும்போது எலிசபெத் பதிலளித்துள்ளார். அவரிடம் ஜெர்மி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, "உங்களுடன் யாரோ ஒருவர் உள்ளார் என்பதை நான் உறுதிப்படுத்திக் கொள்ளலாமா?" எனக் கேட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, நெட்டிசன்கள் இந்த மோசமான தருணம் குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர், "பிரேக் டைம் கேள்வி : ஹோகன் தன்னுடைய மனைவிக்கு போன் செய்தபோது தொலைபேசியில் பதிலளித்தவர் யார்? எனவும், மற்றொருவர், "இதுதான் நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான லைஃப்லைன் அழைப்பு (கணவன் - மனைவி இடையில்) எனவும் கமெண்ட் செய்துள்ளனர்.
ஆனால் உண்மையில் அந்த ஆண் குரல் தானியங்கி குரல் எனவும், அழைத்தபோது, 'மன்னிக்கவும், இந்த தடத்தில் சேவை எதுவும் இல்லை" என்றே வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி தொகுப்பாளர் விளையாட்டிற்காக அப்படி கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடுத்தடுத்த திருப்பங்களைத் தொடர்ந்து ஹோகன் இறுதியில் £64,000 உடன் வீட்டிற்குச் சென்றதும் நடந்துள்ளது.

மற்ற செய்திகள்
