'மகன் சொன்ன சாட்சியை நம்பி.. மனைவியை கொன்றதாக கணவரை கைது செய்த போலீஸார்!'.. 'எல்லாம்' முடிந்த பின் நடந்த 'பரபரப்பு' ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 16, 2020 04:55 PM

மனைவியை கொன்றுவிட்டதாக கணவனை காவல்துறையினர் கைது செய்திருந்த நிலையில், இறந்ததாக கூறப்பட்ட பெண் திடீரென உயிருடன் வீட்டுக்கு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

UP wife allegedly killed by husband came back alive

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரன் விஜய் சிங் – லதா தம்பதிக்கு 7 வயதில் ருத்ரா என்ற மகன் உள்ள நிலையில் லதாவை விஜய்சிங் கொன்றுவிட்டதாக லதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் ரத்தம் சொட்டி இருந்தது. இதனால் லதாவின் கணவர் விஜய்சிங் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் விஜய் சிங், தொடர்ந்து தான் கொலை செய்யவில்லை என கூறிக்கொண்டே இருந்துள்ளார். அந்த சமயத்தில் அவரது 7 வயது மகன்,  தன் தந்தை தான் தனது அம்மாவை கொலை செய்ததாகக் கூறியதால், காவல்துறையினர் விஜய்சிங்தான் கொலை செய்ததாக உறுதியாக நம்பி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்துபோனதாகக் கூறப்பட்ட லதா, திடீரென உயிருடன் வந்தது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் லதா தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே முதற்கட்ட விசாரணையில், தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை சிக்க வைக்க லதா,  இப்படி நாடகமாடியது தெரியவந்துள்ளது.  எனினும் சிகிச்சை முடிந்த பிறகு லதாவிடம் விசாரணை நடத்துவதற்கு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. UP wife allegedly killed by husband came back alive | India News.