'ஒழுக்கமற்ற நடத்தையால்' பிரிந்து வாழும் மனைவிக்கு 'கணவர்' விஷயத்தில் 'இதை' பெற தகுதி இல்லை - ஐகோர்ட் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 20, 2020 09:37 AM

அரசு ஊழியராக பணியாற்றியவர் தேவசகாயம். கடந்த 2011-ம் ஆண்டு இறந்துபோன இவர் தனது முதல் மனைவி மேரியின், நடத்தை சரியில்லை என்பதால், கருத்து வேறுபாடு உண்டாகி, அவரை விட்டு சட்டப்படி 1988-ம் ஆண்டு பிரிந்து வாழ்வதற்கான கோர் உத்தரவை பெற்றார். பின்னர், 1989-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்துகொண்ட இவருக்கு, 2 மகள்கள் உள்ளனர்.

wife separated due tio this reason ineligible to get husbands pension

இந்நிலையில், தேவசகாயம் மரணம் அடைந்ததால், ஓய்வூதிய பண பலன்கள், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்டவைகளை கேட்டு தேவசகாயத்தின் 2வது மனைவி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்த முதன்மை கணக்காளர் ஜெனரல், குடும்ப ஓய்வூதியம் 2-வது மனைவிக்கு வழங்க முடியாது என்று முதலில் மறுத்துள்ளார்.

ஆனால், 2-வது மனைவியின் மூலம் பிறந்த 2 மகள்களும் ஓய்வூதிய பலன்களை பெற தகுதியானவர்கள் என்பதால்,  ஓய்வூதிய தொகையை , முதல் மனைவி மேரிக்கு ஒரு பங்கும், 2-வது மனைவி ராணியின் 2 மகள்களுக்கு தலா ஒரு பங்கும் என மூன்றாக பிரித்து வழங்குவதற்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து ராணி ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன், “தேவசகாயம் சட்டப்படி பிரிந்து வாழ கோர்ட்டில் உத்தரவு பெற்றாரே தவிர , முதல் மனைவியுடன் விவாகரத்த பெறவில்லை. இதனால் தேவசகாயத்தின் இரண்டாவது மனைவிக்கும் மறைந்த அரசு ஊழியர் தேவசகாயத்துக்கும் நடந்த திருமணம் சட்டப்பூர்வமானதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றாகிறது. எனவே  2-வது மனைவியான மனுதாரருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என்று முதன்மை கணக்காளர் ஜெனரல் உத்தரவிட்டது சரியே” என்று குறிப்பிட்டார்.

அதேசமயம்,   “முதல் மனைவி, தேவசகாயத்தின் ஓய்வூதியத்தை பெற தகுதியானவர்தான் என்றாலும், ஒழுக்கமற்ற நடத்தையின் காரணத்துக்காக பிரிந்து வாழும் உத்தரவை பெற்றிருப்பதால், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்படி, கணவரின் ஓய்வூதியத்தை பெற தகுதியானவர் இல்லை” என்று கூறிய நீதிபதி, அதனால், ஓய்வூதியத்தை 3 பங்காக பிரித்து வழங்கும் உத்தரவை ரத்து செய்வதாகவும், சுருக்கமாக 2 மனைவிகளுமே குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் இல்லை என்று முடிவு செய்வதாகவும்,  அதேநேரம், மறைந்த அரசு ஊழியரின் ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும், 2-வது மனைவியின் மூலம் பிறந்த 2 மகள்களுக்கு சரிசமமாக பிரித்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wife separated due tio this reason ineligible to get husbands pension | Tamil Nadu News.