'ஆத்திரத்துல அப்படி செஞ்சுட்டேன்'... 'ஆனா 2 நாளா உடலை வெச்சு'... 'கணவரின் வாக்குமூலத்தைக் கேட்டு'... 'ஆடிப்போய் நின்ற போலீசார்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் மனைவியை கொலை செய்த ஒருவர் அவருடைய உடலை 2 நாட்களாக வீட்டுக்குள்ளேயே வைத்திருந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் பெடுல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பாய்யலால் இவ்னி - சுனிதா. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில், அனைவரும் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் பாய்யலாலின் குடிப்பழக்கத்தால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி இரவு ஏற்பட்ட சண்டையில் குடிபோதையில் இருந்த பாய்யலால் சுனிதாவை தலையில் கட்டையால் அடிக்க, ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து மனைவியின் உடலை மாட்டு சாணத்தின் உள்ளே மறைத்து வைத்த அவர் இதுகுறித்து உள்ளுர் மந்திரவாதி ஒருவரிடம் கூறியுள்ளார். பின்னர் அந்த மந்திரவாதியும் பாய்யலாலின் மனைவியை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுமானால் பூஜைகள் நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். அதைக் கேட்டு பாய்யலாலும் 2 நாட்களாக மனைவியின் உடலை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்துள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வரவே சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிதைந்த நிலையில் இருந்த சுனிதாவின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். பின்னர் பாய்யலால் மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்ததையும், அவரை உயிர்ப்பிக்க மந்திரவாதி பேச்சை வீட்டுக்குள் 2 நாட்களாக உடலை மாட்டு சாணத்தின் உள்ளே மறைத்து வைத்திருந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். அதைக் கேட்டு ஆடிப்போன போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
