என்னது முகத்தில் கேக் பூசறதுக்கெல்லாம் ஜெயிலா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 14, 2019 03:06 PM

பொது இடங்களில் கேக், முட்டை, ரசாயனம் கலந்த கலர் பொடி போன்றவற்றை முகத்தில் பூசி பிறந்த நாள் கொண்டாட சூரத் நகரில் கடுமையான கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

unsafe birthday celebrations in public place can land you in jail

சூரத்தின் டுமாஸ் சாலையில் இது போன்ற பிறந்த நாள் கொண்டாட்டங்களால் நிறைய அசம்பாவிதங்களும், இடையூறுகளும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது இளைஞர் ஒருவர் விளக்கு கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு முட்டையால் அடிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவரை அருகில் இருப்பவர்கள் வந்து காப்பாற்றியுள்ளனர்.

இதுபோன்ற சில நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, சூரத் போலீஸ் கமிஷனர் சதிஷ் ஷர்மா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். இதன்மூலம் பொது இடங்களில் ஆபத்தான முறையில் பிறந்த நாள் கொண்டாடுபவர்களைக் கைது செய்யவும் முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. சாலை போன்ற பொது இடங்களில் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெற்றால் சிறப்பு கவனம் செலுத்தவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : ##SURATH #BIRTHDAYCELEBRATION ##CAKEONFACE ##JAIL