“அட இதாங்க பாசம்”!... எங்களாமோ தேடுனேன், தன் ‘103 வயது அம்மாவை 60 வருஷத்திற்கு பிறகு கண்டுபிடிச்ச 80 வயது பெண்’ கூறிய நெகிழ்ச்சியூட்டும் காரணம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Arunachalam | May 11, 2019 11:33 AM
அறுபது வருட தேடலுக்கு பின் 80 வயது பெண் ஒருவர் தனது 103 வயது அம்மாவை கண்டுபிடித்துள்ள சம்பவம் அயர்லாந்தில் நடந்துள்ளது.

அயர்லாந்தின் டப்ளின் நகரில் உள்ள அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர் எய்லீன் மாக்கென். இவரது தாய் எலிசபெத். எய்லீன்க்கு இவருடைய அம்மாவின் பெயர் மட்டும்தான் தெரியுமே தவிர அவர் எங்கு இருக்கிறார். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தனது அம்மாவை தேடி கொண்டிருந்த எய்லீன். அயர்லாந்தில் கடந்த வருடம் ஆர்டிஇ ரேடியோ சார்பில் நடத்தப்பட்ட நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்ற எய்லீன் தனது தாயாரை தேடிக்கொண்டிருப்பதை பற்றி அந்த நிகழ்ச்சியில் கூறியுருக்கிறார். இதையடுத்து, பரம்பரையியல் வல்லுநர் (Genealogist) உதவியோடு எய்லீன் தனது அம்மாவை கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து, ஸ்காட்லாந்தில் இருக்கும் அவரது அம்மாவின் வீட்டை கண்டுபிடித்து சென்ற எய்லீன் தனது அம்மாவை சந்தித்து ‘நான் அயர்லாந்தில் இருந்து வருகிறேன். என் பெயர் எய்லீன் நான் உங்கள் மகள்’ என்று எய்லீன் கூறியதும் அவரது அம்மா எலிசபெத் எய்லீனின் கையை பிடித்துக்கொண்டு நீண்ட நேரமாக விடவே இல்லை.
இந்நிலையில், எய்லீன் கூறுகையில், பரம்பரையியல் வல்லுநர்தான் ஒரு நாள் எனக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார். அப்போது எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை. இதனையடுத்து, நான் என் கணவர், குழந்தைகளுடன் சென்று அம்மாவை பார்த்தேன் அவர் என்னை ஏற்றுக்கொண்டார்.
மேலும், என் அம்மா என் மகளிடம் ‘யாரென்று தெரியாமலேயே, என் வாழ்க்கை முழுவதும், இந்த பெண் மீது அன்பு செலுத்தி கொண்டிருந்தேன்’ என்று கூறினார். இப்போது நான் மகிழ்ச்சியான பெண்ணாக இருக்கிறேன் என்று எய்லீன் கூறியுள்ளார்.
